வெள்ளிப் பனிமலை

உறைந்த பனிமலை

சூரியனிடம் காதல்

கொண்டது

,

ஆயிரம் கரங்கள்

தழுவியது

அன்பினால்

உருகி உருகி

நதியை பெற்றெடுத்தது

,

நதி வளரத் தொடங்கியது

அருவியாக நீரை கொட்டி விளையாடியது

,

நதியின் ஆழம் பெறுக

மலை இரண்டாக

பிளந்து கொண்டது

,

நதி உயர்ந்தவுடன்

கடலுடன் கலந்தது

,

மலைக்கு வேறு வழியில்லை

கடலில் மூழ்கியது

நினைவிலிருந்து

காணாமல் போனது

,

சூரியன் தேடிப் பார்த்து விட்டு

அடுத்த 

அழகான உயர்ந்த

நீலப் பனிமலையிடம்

தஞ்சம் புகுந்தது

++

நகரத்திற்கு எதிராகக் கடற்கரை


கடற்கரையில்
கால்களின் முகம் 

நகங்கள்

நனைக்க
ஊருக்கு வெளியே
செல்ல வேண்டியுள்ளது
மொத்தக்  கடற்கரையும்
ஊரை ஒட்டித்தான்  உள்ளது.
,
கடற்கரையின் முகம்
தெரிந்த இடத்தில்
இருந்து தான்
பேரமைதி தொடங்கும்
,
நாம் தேடிச் சென்றாலும்
வரவேற்பது என்னவோ 

பெருங்கடல்
இரு கைகளையும்
அகல விரித்தவாறு
இதயத்தில் 

பெருங்குரலெடுத்து

வரவேற்கும்

அலைகளைக் கண்ட 

உடைகள் வெட்கப்பட்டு
சுருண்டு கொண்டன
அலைகளைத் தொட்டவுடன் நுரைகள் பெருகுகின்றன
,
வானத்தில்
பறவைக் கூட்டங்கள் 
ஒன்றுடன் ஒன்று
இடமாற்றி ஏதோ ஒரு வடிவத்தில் பறப்பது போன்று
அலை நுரைகள்
ததும்பி
நிலத்தை தொடாமல்
பறக்கின்றன
,
கரை நிழல்
ஈரம் கொண்டது
கரைகளில் நிற்க முடியாமலும்
கடலில் சென்று
கலக்க முடியாமலும்

,

வீழ்ந்தும் உயர்ந்தும்  
தவிக்கிறது
ஆடிக் கொண்டு
இருக்கும்
மர ஊஞ்சல்

,

பனி படர்ந்த
பொடியில்

நீரில் மூழ்காமல்
நடந்து செல்வது
ஆம்பல் மலர் இதழ்கள்
பாதங்களை ஏந்துவது போன்று
மணல் பஞ்சு மெத்தை ஏந்துகிறது
நம் எடையைச் சிறிது 
சிறிதாகப் புதைந்து 
சுவடுகளை வரைந்து கொண்டே  வருகிறது.

,

அன்பு கொண்ட
உள்ளம் மனதை
வருடுவது போல்
அலைகள் கொண்ட
நுரைகள்
எல்லாவற்றையும்
நனைத்து விடுகின்றன

ஊருக்குள்

பறந்து செல்ல

பொன் மணல் துகள்கள்

பெருங்காற்றுக்கு
காத்துக் கொண்டு
இருக்கிறது

++

மழையில் நனைதல்

மழை பெய்தால்

எல்லோரும் செய்வது

நனையாமல் இருப்பது

குடை பிடிப்பது

கூரையின் கீழ் நிர்ப்பது

பெண்களை வேடிக்கை பார்ப்பது போல் பார்த்தல்.

எங்கோ ஓடுவது

பதற்றம் கொள்வது

வேண்டி கொள்வது

மழையில் நனைதல்

யாருக்கு வாய்த்ததோ

,

தொடர் விளக்கு

தொடர் விளக்கு

தொடர் வண்டி போல்

தொடர் விளக்குகள்

,

திருவிழாவை அறிவிக்கிறது

அழைக்கிறது

கவனத்தை பெறுகிறது

,

அகல் விளக்கை ஏற்றியவுடன்

அந்தரத்தில்

ஒவ்வொரு விளக்காக

பறந்து 

,

ஒன்றுடன் ஒன்று ஒட்டி கொண்டு

ஒளிகள் பல சேர்ந்து

அணியாக

,

வானத்தின் கீழே

மாளிகைகள் மேலே

பட்டு ஒளி வீசியது

,

பறக்கும் இதழ்கள்

மல்லிகை கொடியில்

மொட்டுகள்

மலர்ந்த நொடியில்

பிரிந்தது

அருகே நின்ற

உருளியில் விழுந்தது

விழுந்த நொடியில்

இதழ்கள் பிரிந்து

பறந்து

செல்ல காத்திருந்தது

அந்த வழியில்

வந்த தென்றல்

எட்டி பார்த்தது

இதழ்கள்

பிடித்து கொண்டு

பறந்தது

++

சோழன்

சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன.  மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *