நான் ஒரு தவறுச் செய்தேன்.
அந்தத் தவறுதான் எல்லா தவறுகளுக்கும் வாயிலாக அமையுமென்று
அப்போதுத் தெரியாது.
தெரிந்திருந்தால் அதைச் செய்யாமல் இருப்பேனோ என்னவோ
யாருக்குத் தெரியும் செய்தும் இருக்கலாம்.
,
எந்த தவறென்றுத் துள்ளியமாகக் குறிப்பிட்டோ இதுதானென்று அடையாளமிட்டோ
சொல்ல முடியவில்லை.
அவ்வளவு இருக்காயென்றுக்கூட
உங்களுக்குத் தோணலாம். அதையும் முன்னமே சொல்லிவிட்டனே.
இருக்கலாம் முடிவிலியாக அதுயென்று.
,
அந்த தவறுக்குக் காரணம்கூட நானாயென்றுத் தெரியாத நிலையில்தான் இந்தக்
கடிதத்தை எழுதுகிறேன்.
தெரிந்தாலுமென்ன நீதானே செய்தாயென்று என்னை நோக்கிக் கேட்கும்
பேனாவின் கூர்யமுனையை
மூடியிட்டு அடைத்தாலும் அரசல்புரசல்
தலையங்கத்தைத் தன் வீட்டுக்கதவை மூடாமல்
மற்ற வீட்டுக்கதவில் விளக்கெண்ணெயூற்றி இருக்கும் இந்த நாசமாப்போன முட்டா
ஊர் வாயை எப்படி அடைக்க முடியும்.
மழைக்கு தவளைகள்
மௌனம் காப்பதா? காக்குமா?
முடியாத காரியமாகுமாச்சே அது யென்று எல்லாருக்கும் தெரிந்தவொன்றுதானே.
,
இவ்வளவு அழுத்தமாகத் தெரியாத அந்த தவறை நான் ஒப்புக்கொள்வதனால் திமிரென்றுக்கூட சிலருக்குத் தோணலாம்.
சரியாகிவிடுமா என்றுக்கூட சிலர் கேக்கலாம். என்னசெய்யது? இதைத்தானே செய்ய முடிகிறது.
,
ஒப்புக்கொள்வதுத்தானே ஆகச் சிறந்த உத்தமமென்று எப்போதோ
ஒரு புத்தகத்தில் படித்தது. ஒப்புக்கொள்வதுதானே தவறுக்கான நிரந்தர தடை அறுவைச்சிகிச்சை அதுவும் அந்தப் புத்தகத்தில்தான் படித்தது.
அந்தப் புத்தகத்தின் பெயரும் ஞாபகமில்லை
அந்த தவறும் ஞாபகமில்லை
ஒரு உறுத்தல் மட்டுமே எப்போதும்
பெயர் தெரியாதப் புத்தகத்தையும் அடையாளம் தெரியாதத் தவறையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்னுள்.
00

துங்கன்.
என்னுடைய பெயர் நீ.இராதாகிருஷ்ணன். ‘துங்கன்’ என்ற புனைப்பெயரில் கதை மற்றும் கவிதை எழுதி வருகிறேன். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் படித்து வருகிறேன். கவிதை நூல் தொகுப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறேன்.


Congratulations ! Continue to write on anything and everything , right or wrong ! We will throng to buy your writings ! Make an Innings on your writings ! Best Wishes , sago !