இரா. மதிராஜ்
சின்ன பையனா
இருந்தப்போ எப்படிப்பா?
இறுதிங்கன்னு
கேட்டப்போ
,
நான் சொல்ல ஆரம்பித்தேன்
“சட்டையின்
ஐந்தாவது பட்டனை
நான்காவது துளையிலும்
நான்காவது பட்டனை
மூன்றாவது துளையிலும்
மூன்றாவது பட்டனை
இரண்டாவது துளையிலும்
இரண்டாவது பட்டனை
முதலாவது துளையிலும்
பொருத்தி போட்டுக் கொண்டு
கால் சட்டையின்
மெயின் பட்டன்
காணமற்போனதால்
அருணாக் கொடியையும்
முழுவதுமாக
நம்பாமல்
இடது கையில்
கால் சட்டையைப் பிடித்துக்
கொண்டு
எதையோ தேடிக் கொண்டும்
ஒடிக் கொண்டும் இருந்தேன் “
என்று உள்ளதை சொன்னேன்.
00

