ஆடு நிலா
பாடு நிலா
தொடு நிலா
/
இனி ஒரு முத்தம்
கொடுத்தது
? கேட்க முடியாத குழந்தை
/
திருத்தி வெளியிட்ட
வாக்காளர் பட்டியல்
ஊழல் இல்லாத நாடு ?
/
முயற்சியும், முதிர்ச்சியும்
வெளி உலகிற்கு வரும்
வேர்க்கடலை
/
உயர்த்து நிற்கிறது
தூக்கி எரியப்பட்ட பொருட்கள்
குப்பை மேடு
00

இரா. மதிராஜ்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத் தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன்

