வேலைகள்.. வேலைகள் என்றிருந்தாலும் நடுகல் இதழை இணையத்தில் ஒன்றாம் திகதியன்று மாதா மாதம் ஏற்றிவிடுவது ஒரு பணியாய் சேர்ந்துவிட்டது. இதை குறைப்பதற்கான வழிகள் எங்கு தேடியுமில்லை. படைப்புகள் சென்ற இதழில் 56 என்றிருந்தது. நிச்சயம் குறைக்க வேண்டுமென நினைத்தேன். வரும் படைப்புகள் அனைத்தையும் நான் இணையத்தில் ஏற்றிவிடுவதாகவும் ஒரு புகார் தமிழகத்தில் மட்டும் சுற்றுகிறது. சென்ற இதழ் வரை அப்படிக்கூட நடந்திருக்கலாம். சும்மாநாச்சிக்கிம் யாராச்சிம் புரளியை கிளப்பி விடுவாங்களா? அவங்களுக்கு வேற வேலையில்லையா? ஆகவே புரளியை மதிக்கிறேன்.


இந்த இதழில் இருபது படைப்புகள் குறைந்துவிட்டது. வந்த சிறுகதைகளில் 12 கதைகளுக்கும் மேலாக நான் வாசிக்க முயற்சிக்கக்கூட இல்லை. வாசித்திருந்தால் அவைகளும் நல்ல கதைகளாகவே எனக்குப்பட்டிருக்கும். என்ன சிரமம் என்றால்.. உங்க புகைப்படத்தையும், உங்கள் சுயவிபரக்குறிப்பையும் அனுப்பித்தாருங்கள்! என்று மெயிலில் அனுப்புவேன். அவர்கள் அதைப்பார்த்து விட்டு அவற்றை அனுப்புவார்கள். இப்படித்தான் இதுவரை நடந்து வந்தது.

இந்த இதழுக்கான கதைகள் வருகையில் அப்படியான புகைப்படம், சுயகுறிப்பு இல்லாத படைப்புகளை நான் தொடவில்லை. அவர்கள் நடுகல் இதழின் இணைய வாசிப்பாளராய்க்கூட இருக்கலாம். அவர்கள் கதையோ, கவிதையோ வாசித்துவிட்டு கீழே எழுதிய ஆசிரியரின் குறிப்பையும் புகைப்படத்தையும் பார்த்திருக்கலாம். ஆனால் அனுப்புகையில் கவனக்குறைவாகவும் இருந்திருக்கலாம்! லாம்! லாம்! அப்படி கதைகள் என்று 12 படைப்புகள் குறைந்துவிட்டது. இப்படி கட்டுரைகள், கவிதைகள் என்று கழிந்துவிட்டன. 25 படைப்புகள் என்பது எளிமையாக இருக்குமென நினைக்கிறேன். முயற்சிக்க வேண்டும்.


வரும் இதழில் இடம்பெறும் படைப்புகள் நவம்பர் 25 தேதிக்குள் வந்தனவற்றை மட்டுமே இதழுக்கு எடுத்துக்கொள்ளலாமென நினைக்கிறேன். 25- தேதிக்கும் மேலாக வரும் படைப்புகளை இனி நடுகல் ஏற்றுக்கொள்ளாது. பணிச்சுமையை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு. படைப்பாளகள் ஒத்துழையுங்கள்.


இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் படைப்பாளர்கள் அனைவருக்கும் நடுகல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது!


அன்போடே என்றும்
வா.மு.கோமு

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *