1
இரைக்கான வேட்டையில்
வேகமெடுக்கும் ஆட்டின் பசியில்
நசுங்கிப்போகும் புல்லின் நுனியில்
படுத்திருக்கும் பனியின் வழிதலில்
நிறைகிறது வழித்தடத்தின் ஈரம்.
பசியின் தீண்டலில்
நனையும் வயிற்றின் கதறலில்
கரைந்துபோகின்றன
விடுமுறை தின வாழ்வு.
2
தனியறையின் கதவோடு
தவித்தும் உளறியும்
பேசியபடித் திரியும்
கிழவியின் விழிக்குள்
ஒளிர்கின்றன
கனவில் தரிசிக்கும் கிழவனின் அழைப்பு

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.