1.
சரவெடியை
கைகளில் பிடித்தவன்
பயப்படுகிறான்
மகளின் கைகளில்
மத்தாப்பு.
2.
குழந்தையின்
மகிழ்ச்சியை
கலைத்தது காற்று
நூல் அறுந்த
பட்டம்.
3.
காத்திருக்கின்றன
விளையாட்டு பொம்மைகள்
குழந்தைகளின்
கைகளில்
அலைபேசி.
4.
கோடை வெயில்
வீதிகளில் கூக்குரலிடும்
ஐஸ் வண்டிக்காரர்
அமைதியாய் வீடு
கைப்பேசியில்
குழந்தைகள்.
5.
மரகளில்லா
சாலையில் பயணம்
இளைப்பாற
நிழல் தரும் இடமாய்
தேநீர்க் கடைகள்.
00

மு.பிரபு, வேலூர்.
சமூக ஆர்வலர், கவிஞர், நூல் விமர்சகர், கவியரங்க கவிதை வாசிப்பவர். புத்தகத் திருவிழாக்களில் உரையாற்றியுள்ளார்.
இவரது கவிதை படைப்புகள்
தினத்தந்தி, இனிய உதயம், காக்கைச் சிறகினிலே, அம்ருதா, பேசும் புதிய சக்தி, ஹக்கூ தின்ணை போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கிறது.
கீற்று, படைப்புக்குழுமம், Bookday மின்னிதழ், காற்றுவெளி போன்ற மின்னிதழ்கள் வலைதளங்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கிறது.

