கலித்தேவன்
ஞாயிறு மாலை அவசியம் வந்து பார்க்கிறேன் என்றவள்.இன்றாவது நம்மை பார்க்க வருவாளா? என்ற கேள்வியோடு வீட்டிலிருந்து வெளியே வேலையிருப்பதாக சொல்லி புறப்பட்டார். மாலை ஐந்து மணியிருக்கும். ராஜராஜன் மணி மண்டப வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தன் இரு சக்கர வாகனத்தை அடர்த்தியான நாகமர நிழலில் நிறுத்திய ஆனந்தன், வாகனத்திற்கு டோக்கன் வாங்கி அவ் வழியே நடந்து சாலை பக்கமிருந்த சுற்றுச் சுவரை ஒட்டிய நடைப் பாதையின், நடுவில் சாலையிலிருந்தும் உள்ளே வரும் கேட்டிற்கருகே சீட்டு வழங்குமிடத்தில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டை ஐந்து ரூபாய் நாணயமாக கொடுத்து பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்து பிரதான கட்டத்தை நோக்கி பலமான சிந்தனையோடு மெதுவாக நடந்தார்.
நடக்கும் பாதையின் இருபுறமும் பலவிதமான மலர்ச் செடிகளும் , அழகை வெளிப்படுத்தும்,மலைப் பிரதேசங்களில் அதிகம் காணப்படும் செடிகளும் வளர்த்து அளவாக கத்தரித்து வண்ணங்களுடன் பிரமிப்பாக குழம்பிய மனதிற்கு இதமளிக்கும் விதமாக இருந்தது. பிரமீடு போல உயர்ந்த கட்டட வாசலுக்கு மெல்லிய சிமெண்ட் நிற தீற்றல்கள் கொண்ட சலவை கற்களாலான பத்து படிகள் ஏறியதும், அகலமான தூண்கள் மட்டுமே தெரியும்,சிறு கூட்டங்கள் நடத்த ஏதுவான இடம். தனிமையை நாடி வந்த ஆனந்தனுக்கு எல்லாத் தூண்களிலும் ஒரு ஜோடி, இரண்டு மூன்று பேராக உட்கார்ந்து அவரவர் தேவைகளை, சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வந்திருந்தனர்.
இணையாக வந்தவர்கள் மடிமேல் படுத்தோ, தோளில் சாய்ந்தோ யாருக்கும் கேட்காத குரலில் பேசியும் அவ்வப்போது முத்தங்களை பதித்தும் தங்களின் இன்பமயமான உலகில் யாருமே இல்லாதது போல தோன்ற,கண்கள் கிறங்க மயக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இளமையை முப்பதாண்டுகளுக்கு முன்பே கடந்து விட்ட ஆனந்தனுக்கு மெல்லிய கிளர்ச்சி ஏற்பட்டாலும் வெளியில் காட்டாமல், தனியாக சுற்றிலும் யாருமில்லாத இடமாக தேடினார்.
வலது புறம் சாலையையொட்டிய சுற்று சுவருக்கருகே பெரிய அடர்த்தியான நிழல் தரும் காகித பூ செடியின் மேல் மணி பிளாண்ட நெருக்கமாக படர்ந்து, புதர் போன்ற தோற்றத்தில் பசுமையாக தெரிந்தது. யாரும் இல்லை என தெளிவும் உறுதியும் படுத்தி அங்கு சென்று அமர்ந்தார். மனம் குழம்பிய நிலையில் பல்வேறு சிந்தனைகள் கிளர்ந்தெழுந்து அவரை பல வழிகளிலும் யோசிக்க வைத்தது. முடிவாக இப்படித் தானிருக்க வேண்டுமென்ற கடைசி கட்டத்திற்கு வந்திருந்தார். இன்றாவது சரியான நேரத்திற்கு வந்து விடுவாளா? வேலையிருக்குன்னு மெசேஜ் கூட போடாம போய்டுவாளா? இறுக்கமான மன நிலையில் தலையை பிடித்தபடி முகம் சுருங்க வருத்தமான முக வடிவில் அமர்ந்திருந்தார். இவ்வளவு நாள் தொந்தரவின்றி போனது இப்போது ஏன் மாற்றம் , எதும் தோன்றாமல் அலைக்கழித்தது மனம், கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி விடும் மனநிலைக்கு வந்து விட்டாளா?
வீட்டில் அவள் அம்மாவிற்கு தெரிந்து விட்டதா? பிரம்மை பிடித்தாற் போலாகி சிலையாக உணர்சிகள் அற்று வெறுமையாக, புழுங்கி புழுங்கி வெந்தது போலானார் .
சிக்கிரமாக வந்தற்கும் காரணம் உண்டு, திடீரென்று திட்டமிட்டதற்கு முன்பே வந்துவிட்டேன் என்பாள், அவர் கிளம்பிப் போவதற்குள் வீட்டுக்கு போறேன் நேரமாயிருச்சி என மெசேஜ் வரும். வரச் சொன்ன இடத்திற்கு வந்து பார்த்தால் இருக்க மாட்டாள். நீ தானே வரச் சொன்ன என கேட்டால் நீங்க வர்றதுக்கு நேரமாயிடுது என்பாள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இது போல மாறுதலாக நடந்து கொள்கிறாள். அவரால் அவள் மனநிலையை புரிந்த கொள்ள இயலவில்லை. மெசேஜில் தினமும் ஐ லவ் யூ என போடுபவள் போடுவதில்லை, அதனால வேறு கொதிப்பில் இருந்தார். இன்று இரண்டில் ஒன்று முடிவு தெரிந்தாக வேண்டும். மனதில் உறுதியோடு காத்திருந்தார்.
ஆனந்தன் உட்கார்ந்த இடத்திலிருந்து குழந்தைகளுக்கென்று ஆற்றுமணல் கொட்டப்பட்ட விளையாடும் இடம் வரை பார்க்க முடியும். குழந்தைகள் ஊஞ்சல்,சறுக்கு மரம், ஏறுமரம் இறங்குமரம் , இரும்புக் குழாய்களால் வடிவமைக்கப் பட்ட விளையாட்டு கருவிகளில், விளையாட்டுக்களில் அவர்கள் தங்களை மறந்து ஈடுபாட்டோடு இயங்குவதை கண்ணிமைக்காமல் கனிவுடனும் ஆற்றாமையோடும் மனதின் வழியாக கவனித்து அதில் மூழ்கினார். குழந்தைகளின் தந்தையர்களும், தாயார்களும் எச்சரிக்கை குரல்களை செவி மடுத்தாலும், அவர்கள் விருப்பப்படியே விளையாடினர். நேரம் போனதே தெரியவில்லை.
கிட்டதட்ட ஆறே முக்கால் ஆகியிருந்தது, லேசாக சேர்வும், எதிர்பார்பின் அளவும் கூடி சிந்தனை அறுந்து அவளை பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தது. இன்றாவது வருவாளா?
ஒரு முறை அவள் சொன்னது நினைவுக்கு வந்தது, கணவன் அவளை கீழே தள்ளி உதைத்து ஒரு காலை மடக்கி ஒடித்து விட்டு தலைமுடியை பிடித்து இழுத்தபடி வீட்டிற்கு வெளியே தெருவில் எல்லோரும் பார்க்கும்படி வீட்டு விட்டு ஒயின்ஷாப் போனது கண்முன்னால் தெரிந்தது அந்த தழும்பை கூட காட்டினாள் . மென்மையாக தடவிக் கொடுத்து தலையை வருடி நானிருக்கிறேன் கவலைப்படாதே என நம்பிக்கையளித்து இன்றுவரை காப்பாற்றி வருகிறார். நிறைய நினைவுகள் அவரை பந்தாடின, அயர்ச்சிக்கு உள்ளாக்கி பதற்றத்தை அதிகரித்தது.
எட்டு மணியாகிவிட்டது மெசேஜ், போன் வரவில்லை, போன் செய்யவும் மனதில்லை, நம்மை இப்படி பெருட்டாக மதிப்பதில்லையே என்ற மனக்கவலை வாட்டியது. எட்டரைவரை பார்ப்பது பிறகு வீட்டிற்கு போகலாம் அதுவரை போனோ , மெசேஜோ போட கூடாது என்ற வைராக்கியத்தின் எல்லைக்கு சென்றார்.
முதன்முதலாக அவளை சந்தித்தது நெஞ்சில் பசுமையாக நெருக்கமாக மாறியிருந்தது மெல்ல திரையிட்டாற்ப் போல் எப்பொழுது நினைத்தாலும் இனிமையும் மெலிதான புன்முறுவலும் தானே தோன்றுவதை தவிர்க்கவே இயலாது. வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து முதல் நிலை உதவியாளரான ஆனந்தன் பழைய கலக்டர் ஆபீசின் வளாகத்தில் ரேசன் கார்டு வழங்கும் பிரிவில் நண்பரை பார்த்து பேசுவதற்காக வளாகத்தின் நுழை வாயிலினருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது , மனு எழுதி கொடுத்து ,வரும் சொற்ப வருமானத்தை எதிர்பார்த்து நுழை வாயிலின் இருபுறமும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த புளிய மரத்தின் கீழ் அமர்ந்து எழுதும் ஒருவரில் ரோஜாவும் இருந்தாள். வழக்கமாக ஆனந்தன் அந்த இடங்களில் மெதுவாகவே வாகனத்தை இயக்குவார் . எதிர்பாரத விதமாக வாகனத்தை பார்காமல் பின்புறம் திரும்பியடி பேசிக் கொண்டே வந்ததில் பிரேக் போடும் முன்பு என் மீது விழுந்தாள் , அவளும் அவரும் கீழே விழுந்ததில் நல்ல வேளை யாருக்கும் அடி படவில்லை. அந்த நாள் முதல் பார்க்கும் போதெல்லாம் மெளன சிரிப்பு முகத்தில் படர்ந்து சிவந்து விடுவாள். ஏனோ அவளை பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக , அடிக்கடி என்பது தினமுமாகி , செல்நம்பரை வாங்கி பேசும் அளவு வளர்ந்தது.
கொஞ்ச காலம் பேசிய பிறகு ஆனந்தன் தனது மனைவியிடம் அவளது இயலாமையை சொல்லி ரோஜாவை தனது வடிகாலாக வைத்துக்கொள்ள அனுமதி பெற்று.ஆற்று பாலத்திற்கருகே பில்லுக்காரத் தெருவில் இடதுபுறம் உள்ள சந்தில் சிறிய தனி வீடு கிடைத்தது ,வீட்டு ஓனரும் அவர் மனைவி மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை, பிள்ளையை அம்மா வீட்டில் விட்டு விட்டு ஆனந்தனும் அவளும் காமக்கடலில் மூழ்கி திளைத்தனர். அவள் தனது அம்மாவிடம் நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாக சொல்லி நம்ப வைத்திருந்தாள். சனி ஞாயிறுகளில் அம்மா வீட்டிற்கு சென்று குழந்தையையும். அம்மாவையும் கவனித்து கொள்வாள். ஆனந்தன் தன்னால் முடிந்தளவு பணமும், வீட்டு வாடகையும் கொடுத்து வந்தார். நான்கு வருடங்கள் எந்தவித தொந்தரவின்றி சென்றது . அடிக்கடி போனில் தன் கணவன் மிரட்டுவதாகவும், இரண்டு முறை மனு எழுதும் இடத்திற்கே வந்து தகராறு செய்தாக சொல்லியிருந்தாள். சமாதானப்படுத்தி விவாகரத்து வாங்கும்படி முயற்சித்ததில் கணவன் விவாகரத்து தர முடியாது என ஆணித்தரமாக சண்டையிட்டு அனுப்பி விட்டதாக போனில் போலீஸ் ஸ்டேசனில் இருக்கும் போதே எச்சரிக்கை செய்திருந்தாள். ஆனாலும் தொடர்பு இறுகி ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாதபடி ஆனது.
கடந்த ஆறு மாதங்களாக சரியாக பேசுவதில்லை, பார்க்க சென்றால் ஏதாவது காரணத்தை சொல்லி அனுப்பி விடுவாள் சனி , ஞாயிறு ஊருக்கு செல்பவள் அங்கேயே ஒரு வாரம் பத்து நாள் தங்கிவிடுவதும் உண்டு, அந் நாட்களில் வாட்சாப்பில் மெசேஜ் வராது, போனும் பேச முடியாது ,சரி விட்டுப்பிடிப்போம் என காத்திருந்தார் . மீண்டும் மனு எழுதிய இடத்திற்கு வந்ததை சொல்ல மாட்டாள் இவராக அந்த பக்கம் அவளை பார்க்கும் நோக்கத்தில் சென்றால் சரியான பதில் கிடைக்காமல் பிறகு பேசுவதாக அனுப்பி விடுவாள்.
என்ன காரணம் என்று பல முறை கேட்டும் விட்டார், பதில் வரவே இல்லை. ஒன்றாயிருந்த ஞாபகங்களும், நாளுக்கு நாள் விலகும் எண்ணங்களும் ஆனந்தனை வாட்டி வதைத்து பைத்தியம் பிடித்துவிடும் நிலைக்கு வந்து விட்டார். மனைவிக்கு தெரியாமல் மறைத்தாலும் வாடிய, கோப முகம் காட்டிக் கொடுத்தாலும் எதுவும் சொல்ல இயலாமல் தவித்தார் . தேவையில்லாமல் மாட்டிக் கொண்டோமோ எனவும் மனம் குமைந்தார். கடைசியாக ஒரு மாதமாகியது அம்மாவீட்டிற்கு போனவள் வரவே இல்லை. போனும் பண்ணவில்லை. இவர் செய்தாலும் எடுப்பதில்லை. முன்பே பேசியபடி இருவரும் சண்டையின்றி பிரிந்து விடலாம் என்றும் சொல்லி பார்த்தார் அதற்கும் மறுப்பு தெரிவித்து , சண்டையிட்டது தான் நடந்தது.
ஆனந்தனின் பொறுமையின் எல்லையை தொட்டு சிறிது காலம் இருந்து பார்த்தார் , வீட்டு வாடகையும், செலவுக்கு பணமும் தங்கு தடையின்றி கொடுத்து வந்தார் . அவர் எதையும் வற்புறுத்தி அடைபவர் அல்ல, முடியாது என்றால் தனித்து விட்டு விடுவார். மென்மையாக கையாள்வார் . அவளே , முத்தம் கொடுப்பதில் நீங்கள் தான் கில்லாடி, ரெமான்ஸ்ல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல என்பாள்.
இதையும் மீறி என்ன நடந்தது ஏன் நம்மை வாட்டி வதைக்கிறாள் என்ற கேள்விக்கு பதிலில்லாமல் தடுமாறினார். ஓய்வு பெறப்போகும் வருடம் வேறு என்ற நினைவும் கண்முன்னே ஓடியது.
எட்டரை மணியும் ஆகியது போனும் வரவில்லை அவளும் வரவில்லை, மணி மண்டபத்தை விட்டு வெளியே வந்து போனை எடுத்து.

வாடகை வீட்டின் ஓனருக்கு போன் செய்தார். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும்.
சார் வணக்கம் இந்த மாசத்தோட வீட்ட காலி பண்ணிடுறேன் இன்னிக்கு தேதி அஞ்சு, இரண்டு மாச வாடகைய கழிச்சிட்டு பாக்கிய கொடுத்தா போதும் என்றார்.
எனங்க திடீர்னு சொல்றீங்க என்னாச்சி அடிக்கடி உங்களயும் , ரோஜாவையும் பாக்கவே முடியல வர்றது இல்லையா ? என்றார்
ஒன்றுமில்லே சார் ரோஜா அவங்க அம்மா கூட சென்னை போறதா சொல்லிச்சி அதனால காலி பண்றோம். என்றார் ஆனந்தன்.
சரிங்க உங்க விருப்பம் எனக்கும் ஒரு மாசம் டைமிருக்கு அதுக்குள்ள ஆள் வந்துருவாங்க வர்ற அஞ்சாம் தேதி வந்து பாக்கி அட்வான்ச வாங்கிக்குங்க என்றார்
மன விரக்தியுடன் அதை வெளியில் காட்டிக் கொள்ளமல் நன்றி சொல்லி போனை “கட்” செய்தார்.
இருசக்கர வாகனத்தை வெளியில் எடுத்து, அதற்குரிய சீட்டை கொடுத்து மனம் குமைய வீட்டை நோக்கி செலுத்தினார். வீட்டிற்கு வந்து பேருக்கு சாப்பிட்டு தூக்கம் வராமல் தவித்தார். ஏன் வரவில்லை என்ற கேள்வி பெரிதாக எழுந்து நின்றது. விலகிப் போக என்ன காரணம் மனம் ஆராயத் தொடங்கியது பல கோணங்களில் அலசிப் பார்த்தும் ஒரு கணிப்பிற்கும் வர முடியவில்லை. இரவு நீண்டு விடியற்காலையில் தூங்கி தாமதமாக எழுந்தார். எழுந்தவுடன் வாட்சாப்பில் மெசேஜ் , ஸ்டேசஸ் எதும் ரோஜா வைத்திருக்கிறாளா என நோட்டம் விட்டார். ஒன்றும் வரவில்லை, ஆபிஸ் , நண்பர்களின் மெசேஜ் மட்டும் வந்திருந்தது.
ஒரு மாதம் கடுமையான மன உளைச்சலில் ஓடியது சரியாக தூங்க சாப்பிட , வேலையில் மனம் ஒன்ற முடியவில்லை ,ஒன்றாம் தேதியின் மதியம் நான்கு மணிவாக்கில் ரோஜாவிடமிருந்து வாட்சாப்பில் மெசேஜ் வந்திருந்தாக காட்டியது. திறந்து பார்த்தார்.
முதலில் ஒரு வீடியோவும் அதன் கீழ் மூன்று நிமிடத்திற்கு மேல் நீடிக்கக் கூடிய ஆடியோவும் வந்திருந்தது. மூன்றாவதாக இரண்டு வார்த்தையில் வீடியோவை பார்த்து விட்டு ஆடியாவை கேட்க சொல்லியிருந்தாள்.
வீடியோவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார் , இது எப்படி சாத்தியமே இல்லையே , பாதுகாப்பான முறையில் தானே இருந்தோம். திட்டமிட்ட வேலை என்பது பார்த்ததும் புரிந்தது. முழு வீடியோவையும் பார்த்தார் கிட்டதட்ட இருபத்தியாறு நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது.
சரி ஆடியோவை கேட்போம் என்று அதை திறந்து கேட்க ஆரம்பித்தார்
முதலில் எடுத்தவுடனே ஐ லவ் யூ என்று அழுதபடி ரோஜாவின் குரல் கேட்கத் துவங்கியது.
இந்த வீடியோவ எடுத்தது வீட்டு ஓனர் பொண்டாட்டி நாம போட்ட பூட்டுக்கு எப்படியோ கள்ளசாவி போட்டு ரிமோட்டுல வேலை செய்யுற கேமராவ மாட்டி வச்சி எடுத்திருக்காங்க எனக்கு ஆறுமாசத்துக்கு முன்னமே தெரியும், நாலுமாசமா என்னையும் உங்களையும் சேரவிடாம என்ன மிரட்டி வந்தாங்க ,அதுக்கு அந்தம்மா வீட்டுக்காரரும் கூடவே இருந்து உதவி செஞ்சிருக்கான் . மொதல்ல சாதாரணமா நானும் இருந்தேன். கடைசியாத்தான் தெரிஞ்சது அவங்களோட உள்நோக்கம்.
நீங்க அட்வான்ஸ் வாங்க போம் போது அந்தம்மா அந்த குச்சிகாரி உங்கள மிரட்ட போறா
அவ என்ன சொன்னா தெரியுமா? இந்த வயசிலயும் எப்படி இவரால இருக்க முடியுது. நீ கொடுத்து வச்சவடி . இனி அது உனக்கு வேண்டாம். எனக்கும் அது மாறி அவரு எங்கூட இருக்கனும்னு சொன்னா
ஜாக்கிரதையா இருங்க என்ற படி ஆடியோ மெசேஜ் முடிந்தது.
00

எனது பெயர் கலிய பெருமாள்.
புனைப்பெயர் கலித்தேவன்.
தஞ்சையில் வசிக்கிறேன். மோட்டார் ரீவைண்டிங் எலக்டிரிக்கல் வேலை பார்க்கிறேன். படிப்பதும் எழுதுவதும் செய்துவருகிறேன்.

