உன் முதல் சந்திப்பில் நான்
என்னை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
தொடங்கிய உன் ரயில் பயணம் ஒரு கவிதை…
,
இதுவரை நண்பனை பார்க்க வந்த சேலத்திற்கு
இப்போது அவனது தோழியான என்னைப் பார்க்க
வேண்டும் என்று வந்த நீ ஒரு கவிதை…
,
நான் உன்னை பார்த்ததும் நீ என்னை பார்த்து
சிரித்த அந்த சிரிப்பு ஒரு கவிதை…
,
பிறகு நீ என்னை பார்க்காமல்
வெட்கப்பட்டு திரும்பிய உன் வெட்கம் ஒரு கவிதை…
,
என்னை அந்தப் பேருந்து நிலையத்தில் முதன்முறையாக
பார்த்த பிறகு என்னிடம் என்ன பேசுவது என்று தெரியாமல்
தயங்கி தள்ளி நின்றாயே அந்த தயக்கம் ஒரு கவிதை…
என்னுடன் சேர்ந்து நடக்கும் போது உனக்குள்
ஏற்பட்ட சந்தோசம் ஒரு கவிதை…
,
நம் இருவரின் பேருந்து பயணத்தின் போது உன்னிடம்
ஏற்பட்ட அமைதி ஒரு கவிதை…
,
என் அருகில் அமரும்போது என் தலை முடியை
சரி செய்யும் போது உனக்குள் தோன்றிய
பெயர் தெரியாத உணர்வு ஒரு கவிதை…
,
என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்த நீ
நான் பேச ஆரம்பித்த பிறகு என்னுடன் சேர்ந்து பேச ஆரம்பித்து
என்னை பேசவிடாமல் பேசிக் கொண்டிருந்த அந்த பேச்சு ஒரு கவிதை…
,
என்னை மட்டுமே பார்க்கும்
உன் கண்கள் ஒரு கவிதை…
,
நான் சாப்பிடுவது அழகு
என்று ரசித்த ரசனை ஒரு கவிதை…
,
என் தலை முடியை மீண்டும் ஒருமுறை சரி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு என்னிடம் கேட்ட அந்த ஆசை ஒரு கவிதை…
,
அதற்கு நான் உன்னை பார்த்த பார்வையில்
உனக்குள் ஏற்பட்ட பயம் ஒரு கவிதை…
(ஆனால் நீ கேட்டதும் எனக்குள் தொலைந்து போன
வெட்கம் மீண்டும் மலர்ந்தது)
,
ஒரு நாள் முழுவதும் என்னுடன் செலவழித்த
உன் நேரம் ஒரு கவிதை…
,
அந்த நாள் முடியாமல் தொடர வேண்டும்
என்று ஏங்கிய ஏக்கம் ஒரு கவிதை…
,
நம் முதல் சந்திப்பு மறக்க முடியாத நினைவாக
இருக்க வேண்டும் என்று அன்று இரவு தெருவெல்லாம்
திரிந்து எனக்கு பிடிக்கும் என்று ஒரு பேனா வாங்கி அதில்
எனக்கே தெரியாமல் என் பிறந்தநாளையும் பெயரையும்
எழுதிக் கொடுத்த உன் பரிசு ஒரு கவிதை…
,
பேருந்தின் உள் நானும் பேருந்தின் வெளியில் நீயும்
என்று நாம் பிரிந்து நின்று கொண்டிருந்த
அந்த பிரிவு ஒரு கவிதை…
,
அவள் என்னுடன் இன்று சந்தோஷமாக இருந்தால
என்னை பிடிக்குமா அவள் என்னைப் பற்றி
என்ன நினைப்பாள் என்று உன்னுள் எழுந்த கேள்வி ஒரு கவிதை…
,
அந்தக் கேள்விக்கான பதிலை என்னிடமே தேடிய
உன் தேடல் ஒரு கவிதை…
,
என் நினைவுகளை தூக்கிச் செல்லும்
உன் இரவு பயணம் ஒரு கவிதை…
,
இந்த உறவு எங்கு முடிய போகிறது என்று
காத்துக்கொண்டு இருக்கும் உன் காத்திருத்தல் ஒரு கவிதை…
,
உனக்கான கவிதை …
உன்னால் தோன்றிய கவிதை…
,
அன்பு செலுத்த மீண்டும் ஒரு இதயம் என்னை தேடி வருகிறது என்ன செய்வது என்று தெரியாமல் நான். என்னிடம் சொல்வதற்கு பதில் இல்லாமல் தொடர்கிறது இந்த உறவு.
000

சே. காயத்ரி.
சேலமே எனது தாய் வீடாகும். நான் பெரியார் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் எம் காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் உள்ள நான் அவ்வப்போது சிறு சிறு கவிதைகள் எழுதுவது வழக்கம்