கர்ப்பக் கிரகத்துக்குள்
கலவி புரிந்தார்கள்
சாமி வரவில்லை
,
கோவிலுக்குள்ளே வைத்து
நாசம் செய்தார்கள்
சாமி வரவில்லை
,
கற்பழித்து இறந்த உடலை
கோவில் வளாகத்திற்குள்ளயே
புதைத்தார்கள்
அப்போதும் கூட
சாமி வரவில்லை
,
செவ்வாய் வெள்ளியென
கோவிலைச் சுற்றும்
இளம் பெண்களும்
இரவுப் பொழுதில்
தனிமையில்
சென்று வருகையில்
வன்புணர்வு செய்யப்பட்டார்கள்
அப்போதும் அவர்களுக்காக
சாமி வரவேயில்லை
,
இவற்றிற்கெல்லாம்
வராத சாமியா
பூஜை புனஸ்காரம் செய்து
மேள தாள சத்தங்கள்
கேட்டதும்
வந்து விடுகிறது.
***
சனாதனத்தை எதிர்த்ததால்
இந்து மதத்தை
புறக்கணிப்பதாக சொன்னீர்கள்
,
மாட்டுக்கறி தின்று
உடம்பை வளர்க்கும்
மாட்டுப்பய கூட்டம்
என்றும் கூறினீர்கள்
,
கொலை கொள்ளையென்றால்
சேரிக்காரன் தான் என்று
பட்டம் சூட்டுனீர்கள்
கடவுளே இல்லையென்றால்
நாத்திகன் நாட்டுக்கே
ஆகாதென்றீர்கள்
,
படித்து பட்டம் பெற்று
அதிகாரப் பதவியில்
வந்தமர்ந்தால்
இட ஒதுக்கீட்டில்
வந்தவனென்றீர்கள்
,
அடிபட்டு வலியால்
துடித்தவன்
தன் வலியை சொன்னால்
அவனை சாதி
வெறியனென்றீர்கள்
,
சமத்துவம் கடை பிடிக்க
சாதி மதமின்றி
காதலித்தால் அதை
நாடகக் காதலென்றீர்கள்
,
அதையும் மீறி காதலித்தால்
ஆணவக்கொலையும்
செய்தீர்கள்
இப்போது,
.
,.
இப்போது,
.
.
உங்களுக்கு ஆயுதமேதுமில்லை
,
ஆகையால்,
எங்களை நாங்களே கொன்றதாக
சினிமாவில் சித்தரிக்கிறீர்கள்
,
உங்கள் கைகளையும்
உங்கள் தலைகளையும்
நீங்களே வெட்டி
சாய்த்து விடுவீர்களென்றால்
,
அப்போது,
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்
அதுவும் உங்களுக்காக…
,
ஆனால்,
.
.
ஆனால்,
.
.,
தர்மம் ஒருபோதும்
தலை குனியாது !
***
வெளியூர் வேலைக்கு
சென்றிருந்தேன்
,
சிலபேர் என்னிடம்
எந்த மாவட்டம் என்றார்கள்
கூறினேன்
,
எந்த ஊரென்றார்கள்
கிராமமென்பதால்
அருகிலிருக்கும்
ஊர் பெயரைக் கூறினேன்
,
அந்த ஊர் தானா ?
இல்லை வேறெதும் ஊரா
என்றார்கள்
எனது ஊர் பெயரைக் கூறினேன்
,
அந்த ஊரில் எந்த தெரு
என்றார்கள்
அதற்கும் பதிலளித்தேன்
,
இப்போது ஓரளவு
தெரிந்திருக்கும் அவர்களுக்கு
நான் யாரென்று !
,
அதை உறுதி
செய்து கொள்ள
மீண்டுமொரு கேள்வி
,
ஒருவரின் பெயரை உச்சரித்து
அவரை உனக்குத் தெரியுமா
என்றார்கள்
ஆமாம் என்று பதிலுரைத்தேன்
,
அவர் உனக்கு என்ன
வேண்டுமென்றார்கள்
அவரை எனக்குத் தெரியுமென்றே
விடை கூறினேன்
,
இப்போது அவர்களுக்கு
உறுதியாக தெரிந்திருக்கும்
நான் யாரென்றும்
என்ன சாதியென்றும்…
***
இன்னும் எப்படித்தான்
நீயிங்கு
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
,
நம் காதலை சாகடித்த
இவ்வுலகத்தை விட்டு
நான் நிம்மதியாய்
இடம் பெயர்ந்து விட்டேன்
,
நானில்லாத இவ்வுலகில்
உன்னால் வாழ இயலாது
என்றுரைத்தாய்
,
இந்தக் காதலில்
ஒரு நாளேனும்
உன்னுடன் வாழ்ந்தால்
என் வாழ்நாள் முழுவதும்
வாழ்தலுக்கு சமமென்றாய்
,
ஆனால்
இச்சமூகம்
சாதியென்றொரு போர்வையில்
உன்னையும் என்னையும்
பிரித்து வைத்து
நம் காதலை சாகடிக்கும்
,
அதில்
பலி கிடாவாக
என்னையும்
பலி கொடுக்கும்
,
நானில்லையென்றால்
இவ்வுலகில்
நீயெப்படி வாழ்வாய்
,
அதற்காகவே
விட்டுச் செல்கிறேன் – இங்கு
எனது மூச்சை
,
அது
உன்னையே என்றும்
சுற்றி வரும்
,
அதில் நீ
வாழ்ந்து கொள்
என் காதலே…
***

கண்ணன்.க,
“தொலைந்து மீண்டவன்” மற்றும் “மௌனத்தின் உரிமைக்குரல்” என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

