ஆயாசப் பொருமல்.

வெக்கை தாழாதபொழுதில்

தூக்கி வந்த நேசத்தை

மூட்டைகளாக்கி பரணியிலிட்டது

நினைவுக்கு வரும்.

அவிழ்த்துப் பார்க்க

ஆசைதான்.

சொல்ப் பேச்சு

கேளாத

சின்னவன் முண்டியடித்து

வெளிவந்து தொலைத்தால்

ஊருக்குப் போகவேண்டியதாகிவிடுமென்ற

பயத்தில்

வெறித்துப் பார்க்க வேண்டியதாகிறது

எப்பொழுதும்.

,

பாசத்தால்

தவிர்க்க முடியாமல்

பாரமாக

தலையில்

ஏறிவிட்ட

தீர்க்கப்படாத

கடனுக்கு

இத்தனைப் பாடுகளாவென

வியர்த்து வழிந்த

இயலாமையின்

கடமைகளை

துணிகளால்

துடைத்ததில்

கரிப்பு வாடை

கண்ணீரை

வரவழைக்கிறது

சுயாதீனக் கேவலாக

ஆயாசம் கூட்டி.

***

வெடித்ததன் வேதனை.

கனன்று

கொண்டே இருந்த

நெருப்பு

வெடித்த பொழுது

சிதறிய குழம்பு

பாறையாகிவிட்டது

துளிர்க்க முடியாத

உறவாக.

***

கள்வனைக் காணாத கண்ணாமூச்சி.

சேகரித்தப் பகலை

சேர்த்து வைத்து

இந்த

அந்தியால்தான்

கட்டினேன்

மூட்டையாக.

சூழ்ந்த

இரவிற்குள்

சோர்வாகாமல்

தேடிக்

கலைத்தோய்ந்து

கண் விழித்தபோது

அவிழ்த்துக் கிடக்கிறது

பகல்

மீண்டும்

அள்ளச்சொல்லி.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *