சிறகுகள் இருந்தால்

தொங்கும் கயிற்றைப் பற்றியபடி

தலைகீழாகக் கூட நிற்கலாம்

,

அதற்கு

உறுதியாக வேண்டும்

உள்ளத்தில் துணிவு

,

பறவையாய் பிறந்ததால் மட்டுமே

இதனை நிகழ்த்திவிட முடியாது

,

ஆதலால்

துணிவுள்ள உள்ளம்

சிறகுகளுக்காக

ஒருபோதும் ஏங்குவதில்லை

,

ஆனால்

துணிவுள்ள உள்ளத்தை

உடையவராய் இருந்தும்

சிலர்

சிறகுகளுக்காக தான்

ஏங்குகிறார்கள்

,

ஏனெனில்

சிறகுகள் இல்லாமல்

இந்த உலகில்

அவர்களால் நிலைக்க முடியாது

,

தங்களை

பாவப்பட்டப் பிறவிகளாய் பார்க்கும்

மதம் பிடித்த மனிதர்கள் காட்டும்

இரக்கமில்லாத பரிதாபங்களை

அறத்திற்கு அஞ்சாத வசைமொழிகளை

பகுத்தறிவுக்கு பொருந்தாத

புறக்கணிப்புகளை

தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது

என்றாலும்

தாங்கிடும் ஆற்றலை

சிறகுகள் தான்

அவர்களுக்கு தருகிறது

,

சிறகுகளை

அவர்களுக்கு தந்தது

இன்பத்தமிழ்

இலக்கியம்

இசை

இவை தவிர

இன்ன பிறவாகவும் இருக்கலாம்

,

ஆனால்

அவர்களுக்கு சிறகுகள்

இயல்பாய் அமைவது

ஒருபோதும் இல்லை

00

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார்.  இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *