1)

முன்பைப் போல இல்லை

இப்போது என்னுள்

ஒரு இடைவெளி வாழ்கிறது;

சுருங்கிக் கொண்டே போகும்

நட்பு வட்டத்தின் வடிவில்.

,

முன்பைப் போல இல்லை

என்னிடம் இப்போது

மெளனம் குடியேறியுள்ளது;

முடிவு செய்து விட்டு

கேட்கப்படும் கேள்விகளுக்காக.

,

முன்பைப் போல இல்லை

என்னுள் இப்போது

பல கேள்விகள் எழுகின்றன;

எதையும் எதிர்பார்க்காமல்

செய்த நமக்கே

ஏன் இப்படி நடந்தது என்று.

,

முன்பைப் போல இல்லை

என்னுள் ஒரு மாற்றம்;

அது உண்மையில்

என்னிடம்தானா?

அல்லது

அவர்களின் விழிகளில் தோன்றியதா?

,

00

,

2)

மனதிற்கும் மூளைக்குமான

மும்முரமான விவாதத்தில்

கண்களின்

வழியே த(க)ண்ணீர்

வெளியேற

,

என்ன ஆச்சு என்ற

கேள்வியின் பதிலாக

காற்றில் பறக்கும்

தூசியின் மீது

பழி போடுகிறேன்.

00

3)

தற்போதெல்லாம்

அவர்களாகவே வந்து

நலம் விசாரித்தும்,

நன்றாகப் பேசியும் செல்கிறார்கள்…

,

நானோ,

சற்றும் யோசிக்காமல்

ஒரு புன்னகையை மட்டும் பரிசளித்து

புழங்கிக்கொள்கிறேன்.

,

யார் அவர்கள்?

எங்கு அறிமுகமானவர்கள்?

எப்போது, எப்படி சந்தித்தவர்கள்?

எதுவுமே நினைவில் இல்லை…

,

அரிதாகவே இருக்கிறது

தற்போதைய

அறிமுகங்கள்.

00

தளபதி சல்மான்

புழுதி இணைய இதழ் மற்றும் பதிப்பகத்தின் நிர்வாக ஆசிரியர்.  கட்டுரையாளர், வரைகலை வடிவமைப்பாளர். தொழில்நுட்ப மற்றும் அதனுடைய பயன்பாடுகள் பற்றி பள்ளி மாணவர்களிடையிலும், தொழிமுணைப்பு பற்றி கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து உரையாற்றிவருகிறார். மேலும் பல்வேறு  சமுக பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *