அவர்கள்… இவர்கள்…

அவர்கள் கைகளில்

திருவோடு

இவர்கள் கைகளில்

துண்டுப் பிரசுரங்கள்

,

அழுக்கு படிந்த

கந்தலாடை அணிந்த

அவர்கள்

தனித்தனியாக அமர்ந்து

கேட்டார்கள் பிச்சை

,

சீருடை அணிந்த

இவர்கள்

குழுவாக நின்று

கேட்டார்கள் நன்கொடை

,

அவர்களிடமும்

அவர்களின் வார்த்தைகளிலும்

இல்லை ஒப்பனை

,

இவர்களிடமும்

இவர்களின் வார்த்தைகளிலும்

இல்லாமல் இல்லை ஒப்பனை

,

சிற்றூர் என்பதால்

கோயிலுக்கு வெளியே

ஒரே வரிசையில் தான் இருந்தார்கள்

அவர்களும் இவர்களும்

வணிகர்களும்

,

அவர்களும் இவர்களும் கூட

வணிகர்கள் தான்

முதலீடும் இல்லை

நட்டமும் இல்லை

அவ்வளவு தான்

,

இவ்வகை வணிகர்களில்

பெரும் இலாபம் அடைபவர்கள்

கோயிலுக்கு வெளியே இருக்கும்

அவர்களும் இல்லை

இவர்களும் இல்லை

00

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார்.  இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *