அன்று எனக்கு தெரிந்தே இருந்தது, இன்று நாங்கள் செக்ஸ் வைத்துகொள்ள போகிறோம் என்பது. அவினாஷிடம் மெல்பினை அறிமுக படுத்தியதிலிருந்தே என் முடிவுகளையும் சேர்த்தே எடுக்க ஆரம்பித்திருந்தான். சில நேரங்களில் எரிச்சலை தந்தாலும், என்னை அவன் உரிமை எடுத்துகொள்ளுவது இயல்பு தானே என சமாதானம் சொல்லிக்கொண்டேன். அவினாஷ் எல்லா உரிமைகளையும் தந்ததால் இது ஒருவித புது நிலையாகவும் இருந்தது.

அவினாஷிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன், வழக்கம்போல இருக்கும் அப்பாவை போலில்லாமல் திரைப்படத்தில் மட்டுமே புதுமை என்று அறிமுகமாகும் அப்பாவை போலிருந்தார். எல்லாவற்றையும் உடனே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதில் ஆண்கள் மீதிருக்கும் ஈர்ப்பு வரை அடக்கம். பள்ளிகாலத்தில் கிடைத்த முதல் முத்தம்வரை. நான் தாமதமாக சொன்னது அன்று நிகழ்ந்த சம்பவத்தின் முடிவாகத்தானிருக்கும்.

இரண்டொரு முறை நண்பனாக வீட்டிற்க்கு வந்த போதெல்லாம், இப்படி சுபலாவிற்கு முன்னாடி எந்த மெனக்கெடாமல் இருந்தா எப்படி அவ கீரின் சிக்னல் காட்டுவா, அவளுக்கு புடிச்ச ஓல்ட் ஹிந்தி சாங் எல்லாம் வாங்கிகொடு எல்லாத்தையும் நானே உனக்கு சொல்லித்தரனுமா? என் சுபலாவிடம் சொல்லி தரதுல கூட அர்த்தமிருக்கும். நான் ப்ரோபஸ் பண்ணின போது வீட்டுல ஸ்பெசல் டின்னர் ஒன்றை பண்ணினோம், அதிகம் சிரித்துக்கொண்டோம்.

பாலக்காடு செல்லும் போதே டெக்ஸ்டில் இன்னைக்கு  இண்டிமேட்டா இருக்க சான்ஸ் அதிகம்ப்பா, pause பண்ணி வைக்கவா, கண்டினீயூ பண்ணவா என அவினாஷிடம் கேட்டிருந்தேன். உன் உடல் உன் விருப்பம் என்று ரிப்ளை செய்திருந்தார். உடனே Progressive, atheist என்று எல்லாம் இல்லை, நான் கேட்டதுமே காலண்டரில் முகூர்த்த நாளா என்று பார்த்திருப்பார், அது ஆமாம் என சொல்லியதும் தான் இந்த என் உடல் என் விருப்பும் என்று அனுமதித்திருக்க காரணம்.

அம்மாவிற்கு நான் பிறக்கும் போதே அவளது இறக்கும் நாளும் தெரியும், அம்மாவின் இறுதி வார்ப்பில் தான் இப்படி அவினாஷ் நண்பன் போல நடக்கிறார்.

எல்லாம் ரோட்டின் குறுக்கே பாதசாரிகள் தாண்டுவதற்கு வரையப்பட்ட கோடுகள் போல எந்த கோணலுமே இல்லாமல் நேர்கோட்டில் இருந்தது.

உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு என அவன் திட்டமிட்டதே நேரமாகிவிடும், நவம்பர் மாதம் என்பதால் இரவில் மழையிருக்கும்போது செல்வதைவிட இங்கு தங்கியிருந்து காலை செல்லலாம் என அவனது திட்டத்திலும் பிசகு இல்லை.

Foreplay ஆரம்பத்த தருணத்திலிருந்து எனக்குள் எந்த மாற்றமும் நிகழவில்லை, விட்டு விட்டு மழைபிடித்தும் நனையாமல் சிறு குளிரை மட்டும் கொண்டு வந்து சேர்க்கும் தருணத்தில் நகராமல் நிற்பது போன்ற உணர்வு தான்.

ஆனால் உச்சக்கட்ட இன்பத்திலிருப்பவனிடம் என்னால் பகிரவும் முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் மழை பிடித்துவிடும் என்று காத்திருந்தேன், அப்போதும் இலையில் தேங்கி நின்று மழைக்கு அதில் கொஞ்சமாக நனையலாம் என்ற நினைப்பிலிருந்தவனுக்கு மேகக்கூட்டங்கள் கலைந்து விட தொடங்கியது வெறுப்பை கொடுத்தது.

இதை எப்படி கேட்பது எனத்தெரியாமல்

“நீ என்ன இன்னும் வயசுக்கு வரலையா?” எனக்கேட்டுவிட்டு சிரித்தான். இன்னும் இடி இறங்கவில்லை. கொஞ்சம் நாசூக்காக எப்படி சொல்வது என வார்த்தைகளை கோர்த்து, அப்படியொன்றும் கவிதை மொழியில்லை “எனக்கு ஒண்ணுமே தோணலடா” என்றேன்

“நான் என்ன ரேப்பா பண்றன், நீ பண்றது பார்த்தா எனக்கு child abuse ஃபீல் தான் கொடுக்குது”

….

என்னிடம் பதிலில்லை.

“Masturbation பண்ணினதே இல்லையா, விசித்திரமா இருக்கு உனக்கு எந்த ஃபீலுமே இல்லதாதது”

மீண்டும் கரு மேகங்கள் கூடவில்லை

ஆனால் இடி இறங்கியது தலைக்கு மேல.

“நீ லெஸ்பியன் இல்லைதானே”

“டேய், அப்டி” நான் முடிப்பதற்குள்

“போடி புண்ட, உன்ன நம்பி என் சாமன எடுத்தற்கு பாத்ரூம் பைப்ல சொறுகுனா கூட எர்க்‌ஷன் ஆகும்”

அதன் பின்னர் மழைக்கு பயந்து அனைவரும் கதவை சாத்திக்கொண்டு வெறுச்சோடி கிடப்பது போல அமைதி நிலைக்கொண்டது. நேரமாக நேரமாக

“இன்னொருக்கா foreplay பண்ணி பாக்கலாம்டா”

“அத ங்கொப்பன பண்ண சொல்லு”

எனக்கு கோபம் வரவில்லை, அழுகைதான் வந்தது, நான் இயல்பில் அப்படி இல்லை இந்த வார்த்தை கேட்டிருந்தால் சட்டையை பிடிப்பவள் தான் ஆனால் ஏன் இப்படி?

அழுகையோடு நினைவுகள் ஈசல்கள் போல குவியத்தொடங்கியது, நான் செக்ஸ் பற்றி பெரிதான பேச்சோ, செயலில் ஆர்வம் காட்டாதது, வரும் வழியில் ஒரு குட்டி ரோட்டை கடக்கும் வரை காத்திருந்தவன், எனக்காக நேரம் ஒதுக்கி இருக்கலாமே, எல்லா நினைவுகளுமே பரிதாபங்களை மட்டுமே கொடுத்தது.

எப்ப ஆர்டர் செய்தான் தெரியவில்லை இரண்டு பீர் குடித்து மல்லாந்தான், புலம்பல் முழுவதும் என்னை  புண்டை என விளித்ததுதான். விடிய துவங்கும்போது பாத்ரூமிலிருந்து கூப்பிட்டான், ஏதோ சமாதானம் என குறைந்தபட்ச மகிழ்வோடு போக அவன் பீர் முழுவதும் சிறுநீராக வெளியேற இத பாத்தாச்சும் மூடு வருதானு சொல்லு என்றான் வெறுப்பு கலந்த நக்கலுடன்.            

எல்லா கதைகளில் வருவது போல என்னிடம் விலக ஆரம்பித்தான், வழிய சென்று நான் பேசினாலும் தவிர்த்தான். ஒவ்வொரு முறையும் அழுகையால் தவித்தேன், அதோடு முடியாமல் என் கதையை நெருங்கியவர்களிடம் சொல்ல அவர்கள் டாக்டர பாரு இப்பவே என்றார்கள்.

அவினாஷிற்கும் நான் அதிகம் அழுவது தெரிந்து என்ன ஏது எனக்கேட்டால் துன்புறுவேன் என ஒன்றும் கேட்காமல் இருந்துவிட்டார். ஒரு வேளை அம்மாயிருந்திருந்தால் பகிர்ந்திருக்க முடியுமோ என யோசித்த கணமே அவினாஷின் அன்பை எடை போடுகிறோமே என்ற எண்ணம் எழ இடது கைகளில் எப்போதும் வளர்த்திருக்கும் நகத்தால் முகத்தை கீறிக்கொண்டேன், அதிலும் தோல்வி தான் வலிக்கவுமில்லை, கீறிய தழும்புமில்லை.

அப்பாவை தவிர்த்துவிட்டு Pornகளை இரண்டு நாள் பார்த்தேன். அப்போதும் ஒரு உணர்ச்சியுமில்லை. இந்த முறை நகத்தால் இல்லை எதற்கும் உதாவத என் உறுப்பின் ரோமங்களை சிரைக்கும் ரேசரால்.

அதை அறிந்துக்கொண்ட அவினாஷ் கவுன்சிலிங் போலாம் என சொல்ல

“நானென்ன பைத்தியமாப்பா?” என கேட்டது தான் அவினாஷ் அப்பாவாக மாறிய தருணம்.

அதன் பின்னர் வெவ்வேறு மருத்துவர்கள் என யாரிடமும் செக்ஸை போல திருப்தியளிக்காததால் மாற்றிக்கொண்டே இருந்தேன்.

செசன் முடிந்து அழுதபடியே வெளி வரும் போதெல்லாம் அவினாஷ் என்றழைக்க தோன்றினாலும் மழைவிட்டும் தூவானம் விடாதது போல் அப்பாவாகவே மாறிப்போனார். ஆனால் அவினாஷ் அவினாஷாகவே இருந்தார்.

ஒவ்வொருவரும் இதை எப்படி கடந்து வாழ்வது என பாடம் எடுத்தார்களே தவிர மொத்த ஆண்களை வெறுப்பது என்றெல்லாம் மாறவில்லை, என்ன மாற்றம் எனக்குள் நிகழ்ந்தது எனத்தெரியவில்லை.

மே மாதத்தின் வெயிலுக்கும் நவம்பர்  மாதத்தின் மழைக்காலம் போல அவினாஷிடை மிகப்பெரிய இடைவெளி ஆனது.

அதற்கான கேள்விக்கான பதில் யாரிடமும் இல்லை ஏனென்றால் நான் கேட்கவேயில்லை.

அம்மாவின் தேவையாக இருக்குமோ, என் உடலுக்காக மட்டும்தான் மெல்பின் நேசித்தானா, இதற்கடுத்து என்ன? என கேள்விகள் துளைத்தது.

அவினாஷிடம் மெல்பினை அறிமுகபடுத்த தருணத்திலும் மழையிருந்தது, அவனது விரைத்த குறி என்னுள் துளைக்க முயன்றபோதும் மழையிருந்தது, அவினாஷோடும் மெல்பினோடு மட்டுமல்ல மழையோடும் உறவு இருந்தது.

இறுதியாக இதில் அவினாஷ் எதற்கு அப்பாவானர் என யோசித்துக்கொண்டிருந்த தருணத்தோடு கோடை மழை என எதிர்பாராத மழை முடியும் வரை காத்திருந்து இந்த கதையையும் என்னையையும் முடித்துக்கொள்கிறேன்.

நிஜந்தன் தோழன்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *