பொய்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அதுக்காக உண்மை பிடிக்காதென்றில்லை..
,
பொய்கள் பிடிக்கிறதுக்கு காரணமே
அதுக்குள்ள ஒலிஞ்சிட்டு இருக்குற
குட்டி குட்டி உண்மைங்கதான்
இதுக்கூட பொய்யுனு தோணலாம்
ஆனா இது கவிதை.
00
வெடுக்கெனவெலாம்
பிடுங்கி எறிய வேண்டாம்
அந்த நெனப்புலேயே
பாதி இறந்துயிருப்பேன்
மீதியும் உசரயும்
ஒங்க கிட்டதான்
கொடுத்துருக்கேன்
எம்மையும் போல.
00
‘என்’னோட முக்கியத்துவம்
‘என்’னோட முக்கியத்துவம் மட்டுந்தான்
இத பிரிச்செழுதி
உடற்கூறு ஆய்வெல்லாம் செஞ்சி
அவ்ளோ முக்கியத்துவமாலாம்
பொருள் புரிஞ்சிக்க தெரியாதெனக்கு.
00
நான் ஒரு பூனயெ வளத்தேன்
ஆனா எல்லாரும் வளப்பாங்களே
பாலூட்டி மீனூட்டி புசுபுசுனு
அந்த மாறியில்ல,
அதுக்கு செலவு பண்ண
பைசாவும் இல்ல, அதுக்குனு
அத பட்டினியாவும் விடல
ஆனாலும் வளத்தேன். யேன் தெரியுமா?
எப்டிஇ விருத வச்சி
“இவரு பயங்கரமா எழுதுறவரு,
இவரு இல்லனா இலக்கியமே ஒலகமே இருண்டுக்கும், அவ்ளோதான் தெரியுமா”
சொல்வாங்களே, சொல்றாங்களோ
அதே மாறித்தான் இப்ப
பூனைய பத்தி எளுதுனாதான்
எழுத்தாளராமா
ஆனா, அந்த கருமம்தான்
வரமாட்டுக்குது எனக்கு.
00

துங்கன்.
என்னுடைய பெயர் நீ.இராதாகிருஷ்ணன். ‘துங்கன்’ என்ற புனைப்பெயரில் கதை மற்றும் கவிதை எழுதி வருகிறேன். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் படித்து வருகிறேன். கவிதை நூல் தொகுப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறேன்.

