வாகையும் எருக்கஞ்செடிகளும்

பூத்திருக்கும் நாளில்

,

வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கே

உணவு கிடைத்தது

இலக்கிய கூட்டத்தில்

,

விரும்பியது கிடைக்காத

ஏக்கப் பெருமூச்சுடன்

பயணத்தின்

கசக்கசப்பு நீங்க

படியில் நின்றேன்

,

டிக்கெட் எடுத்திட்டீங்களா?

எடுத்து காண்பித்தேன்.

,

எனது வயிற்றை மேலிருந்து

கீழாக வருடி

சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் என்றார்

,

சிரித்துக்கொண்டேன்

,

வேலை முடித்து வீட்டிற்கா?

எங்கே இருக்கீங்க?

அடுக்கடுக்கான கேள்விகளில்

யாரிவர் என்ற யோசனை

,

சொன்னால்

நானும் கலந்து ஐக்கியமாவேன்

,

போன் நம்பர் கொடுத்தால்

பேசுவேன்

கலப்புற்று மகிழலாமே என்றெல்லாம்

சமிக்ஞை கொடுத்தார்

,

என்னைப் பார்த்து ஏன் கேட்கிறார்.

யோசனையில்

,

முன்னாடி நிறுத்தத்திலேயே

இறங்கிவிட்டேன்.

,

படியில் நின்றபடியே

பொறவு எப்ப சந்திக்கலாம்

மாரியம்மன் கோவில்தானே

நானே வாரேன் என்றாள்

,

சினிமா விளம்பரத்தில்

டோரதி சிரித்தார்

,

தவறவிட்டு விட்டேன்

தொடரும் பயணத்தை

என்றது மனம்.

00

துவாரகா சாமிநாதன்

கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’, சப்த கன்னிகள்- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *