சிக்கன் கடையோரம்
தேநீர் பருக தினந்தோறும்
பயணித்த
எனது ஆட்டோ
சில நொடிகள்
நிற்கும்
,
எனது
முதுகு வலிக்கிடையே
மூக்கு மோப்பம் பிடிக்கும்
,
வழமையாக
அங்கு நான்கைந்து
கூண்டுகளில்
பிராய்லர் கோழிகள்
,
அரைத்தூக்கத்தில்
கண் செருகி
சிலதுகள் நெருக்கும்
பக்கத்து உறவுகளிடம்
,
முறையீடு சப்தங்களை
விநியோகித்து
காலைக்கடனைக் கழியும்
,
கழிந்த எச்சங்களின்
நாற்றங்கள்
மூக்கில் தாக்குண்டு
அந்த இடமே
,
கட்டணமில்லா
கழிப்பிடமாகும்
இதனூடே
சிறு பறவைகளின்
இர்ரிச் இர்ரிச்
சப்தம்
,
நம்மை
கவனிக்கவைக்கும்
சற்று தள்ளி
ஒரு
காலண்டர் அட்டையில்
ஒட்டிய
விளம்பர வாசகம்
தமிழின் காலை ஒடித்து
தொங்கும்
,
இங்கு
கடை கிடைக்கும்
,
காடை பறவை
எந்த மொழியில்
எப்போது
கடை பறவை
ஆனது.
00


