டிஜிட்டல் உலகு

டிஜிட்டல் உலகு முறிவுகளை அதிகரித்தபடி

விரைகிறது

–

காதலை

அன்பை

உறவுகளை

நேர்மையை

–

மனதையென

அதன் பட்டியலில்

இல்லாதது ஏதுமில்லை

–

டிஜிட்டல் ஏனிந்த வெட்டி முறிப்பை

இவ்வளவு சிரத்தையாகச் செய்து வருகிறது

காரணத்தின் கரு டிஜிட்டலியே இருப்பதை

ஓர் எலும்பு முறிவுப்

பரிசோதனையைப் போலத் தெரிந்து கொள்ள முடியும்

–

எல்லா டிஜிட்டல் எண்ணும் எலும்பு முறிவுகளைக் கொண்டுள்ளது.

முறிவுகள் இல்லாமல் ஓர் எண்ணும் டிஜிட்டலில் இல்லை

இப்படியான டிஜிட்டல் உலகில் முறிவுகள்

இயல்பாகிவிடுவதை

ஏற்க மறுத்து

காத்திருப்பவர்களின் காலடியில்

உறிஞ்சிப் போட்ட எலும்புத் துண்டுகள்

குவித்து கொண்டேயிருக்கின்றன.

++

தசாமி

தாரபுரத்தைச் சார்ந்த செல்வப்பிரகாஷ்

தசாமி என்ற பெயரில் எழுதி வருகிறார்.

சிற்றிதழ், அச்சு இதழ்களில் கவிதைகள் வெளியாகி உள்ளது.

உடலெங்கும் வெய்யில் எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *