பல்லி சாஸ்திரம் அல்லது கௌலி சாஸ்திரம்

சூர்யமித்திரன்

அந்தக்காலத்து

மண்சுவற்றின்

விட்டமேறும் ஊர்வன

,

கான்க்ரீட் சுவற்றிலும்

வழுவழுவென வழுக்கும்

டைல்ஸ் சதுரங்களிலும்

உலாவும்

,

விட்டத்து சுவற்றிலும்

தலைகீழ்  ஒட்டுதலில்

பயணிக்கும்

இரைதேடி

,

இந்த இனத்துக்கு

கௌலி என்கிற பல்லி

நாமகரணம் சூட்டியவர்

எவரோ

,

 வாயில் இரும்புகேட்

மரக்கதவின் சந்து

மௌனமாய்

இரைக்குக்காத்திருந்த

,

கணங்களில்

மூடி திறக்க

திறக்கமூட

பண்ணும்போது

வாலறுந்து வீழும்

கத்துதல் ஏதுமின்றி

,

கடவுளின் மனசாட்சி

நம் உரையாடலின்

குறுக்கீடாய் சமிக்ஞை

சப்தம்

,

கௌலியே சொல்லிடிச்சு

கமல் வசனம்போல

,

பத்திரிகை தலைப்பாக

சாம்பாரில் பல்லி

சாப்பிட்டவர்கள் மயக்கம்

,

பஞ்சாங்க பலன்கள் போல

பல்லிவிழும் பலன்களும்

நம்மை பயமுறுத்தும்

,

இடதுபக்கம் உறுப்புகளில்

மேல் விழுந்தால் அதிர்ஷடம்

வலதுபக்கம்

நாசம் மோசம்

,

தலை மரணம்

தோள்.. இப்படியான

சாஸ்திரம்

,

புணரும் கணங்களில்

பாகத்தில் பக்கவாட்டுகளில்

விழுந்தால் பலன் என்ன

என்று பகுத்தறிவாளர்

வினவினால்

ஓடிவிடத்தான் வேண்டும்.

00

சூர்யமித்திரன் .

கவிதை சிறுகதை கட்டுரை என பல்வேறு சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் நாற்பத்திநான்கு ஆண்டாக எழுதிவருகிறார். சூர்யமித்திரன் . கவிதை சிறுகதை கட்டுரை என பல்வேறு சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் நாற்பத்திநான்கு ஆண்டாக எழுதிவருகிறார். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *