தனித்திருக்கும்போது

எதோ ஓர் உயிர்

நம்மை வந்துத்

தொற்றிக் கொள்கிறது.

பின் அதுவே நம்மை

துன்புறுத்தவும் செய்கிறது.

,

பிரபஞ்சம் எவ்வளவு அற்புதமானது.

அதனால்தான்  எறும்புக்காலளவுள்ள

நம்முடன் தலை கீழ் விளையாட்டை

அன்றாடம் அன்றாடம் விளையாடி

ஆனந்தக் கூத்தாடுகிறது.

00

நாம் தனிமையை

அன்போடு ஆரத்தழுவி

அரவணித்துக் கொள்ள 

மறந்து அநாதையாக்கி விடுகிறோம்.

,

அதனால்தான் என்னவோ

தனிமை நம்மையும் அநாதையாக்கிவிடுகிறது.

00

தனித்திருத்தல் என்பது பேரனுபவம்

ஆம்,  பேரனுபவத்தினால் தான்

நாம் தனித்தே இருக்கிறோம்.

00

சில விடயங்களில்

நம் மூக்கை நாமே

அறுத்துக் கொள்ளவதுதான்

உத்தமம்.

,

நம் உள்ளிருக்கும்

மனித இயல்பு

நம்மிடையே நம்மால்

நம்மையே மறக்கடிக்கப்பட்டு

ஊசியளவு மெல்ல மெல்ல

நுழைத்து நுழைத்து

இடருக்கண்மையில் இடம்பெற்று

சிற்றின்பத்தில் உய்க்கிறது நம்மை.

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *