என் மீது அதிக அன்பு செலுத்தாதீர்

அதற்கு நான் பாத்திரவான் அல்ல என்பது மட்டுமல்ல

பதிலுக்கு

செய்முறை அன்பும்

செய்யத் தெரியாதவன்

/

தூக்கித் தூரே எறிந்தால்

வெறும் விதைகளாய்

போய் விழாதீர்கள்

பெரிய விருட்சமாக வளருங்கள்….

/

அமைதியானத் தெரு வழியாய்

நீ நடத்து வந்தாய்

முதலில் புயல் வந்தது

நீ சென்ற பின்பு

பூகம்பம் வந்து விட்டது

இப்போது புரட்சியே வெடித்திருக்கும்….

00

இரா. மதிராஜ்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து  திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத்  தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன் .

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *