-மாரி.கிருஷ்ணமூர்த்தி

1.

சட்டென விரிந்தது வானம்

கிடைத்தது ஒரு பருக்கை

கூவி அழைக்கிறது

தம் உறவை

2.

எல்லா இடமும்

அவளுக்கு

ஓரே சாலை

ஒரே இடம்

ஒரே மரம்

காக்கை,குருவிகளோடு

துளிர்ப்பும்,சருகுமாய்

பயண மூட்டையின்

மோனப் பரப்புக்கிடையில்

கடக்கிறது காலம்

3.

இப்போதைக்கு

நடை மேடை மரமே

வீடாகிவிட்ட பிறகு

பகலிலும்

தூளி கட்டி

ஊஞ்சள்

கொள்கிறாள்

குழந்தையின்

வாழ்வை

4.

ஊசி,மணியென

கோர்த்து விற்ற

உழைத்த

காசிருந்தும்

டீக்கடை,மளிகை கடையென

எல்லா இடத்திலும்

அவள்

குரல் வளைக்கு பூட்டும்

காத்திருத்தலும்

இருந்தும் குழந்தைகளை

பார்த்தாள் வஞ்சமில்லாமல்

பல் தெரிய சிரிக்கிறாள்

5.

நிலவு எழுந்ததும்

புகாரில்லாத

பறவை அடைதல்

போல அவள்

குழந்தையோடு

இரவு

தூக்கம்

6.

நடு இரவில்

யாராவது எழுப்பும்

போதும் மட்டும்

பதட்டமாகிறாள்

மரத்தை பார்த்தபடி

00

மாரி.கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும், கடந்த பத்து வருடமாக  இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்” சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும், ஊர் பொது கிணறு புணரமைப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார். அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார். தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார். அப்பா மாரிமுத்து. அம்மா ஜெகநாதம்மாள். மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *