1. ஒரு துண்டு வனம்
காலைப்பனியில்
வெடித்த பாறைகளுக்கு
அருகே
காற்றாட அசையும் காந்தல்
பூவின்
உயிர் சுடர்
அந்த காட்டின்
பரந்துவிரிந்த
வாழ்வை ஒரு
கணம் விழித்து
காட்டியது
2.
மரம் முழுக்க
விரிந்திருக்கும்
கொன்றை பூவில்
மஞ்சள் வெயிலின்
சாயல்
3.
சுகவாசியாய்
பகலில் எங்கு போய்
மறைந்துக்கொள்கிறதென்று
தெரியவில்லை
மின்மினிகள்
,
இருளை கண்டதும்
காதலின் தவிப்போடு
மின்னி மின்னி விரிக்கிறது
ஒளியை
00

மாரி.கிருஷ்ணமூர்த்தி
நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவன்.தொடர்ச்சியாக கனலி,தளம்,யாவரும் போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.அத்துடன் விவசாயப்பணியும்,சமூக பணிகளிலும் ஈடுபடுத்தியுள்ளேன்.எங்கள் கிராமத்தில் குழந்தைகளுக்கான தும்பட்டான் என்ற நூலகமும், மாலை நேர பள்ளியும் நடத்தி வருகிறேன்.

