செர்பிய மொழியில் : ராட்மிலா பெட்ரோவிக்

ஆங்கிலம் வழியாக தமிழில் : அரவிந்த் வடசேரி

என் பாட்டி எப்படிப்பட்டவள் என்பது உங்களுக்குத் தெரியும்

அவள் ஹர்ட்செக் நோவீயில் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அவன் சுற்று வட்டாரத்திலுள்ள சுவர்களின் மீது

கரண்டியை வீசிக்கொண்டிருந்தான்

பிறகு அவளுக்கு திருமணமானது. 

குளிர்காலங்கள் நீண்டவையாக இருந்தன

கணப்பு அடுப்பிற்கான விறகு தீர்ந்து போயிருந்தது

அவள் ஒரு நெருப்பை மூட்டினாள்

அவன் நெசவு ஓடங்களை அவளின் தலை மீது சிதறடித்தான்

,

போகுமிடமெல்லாம்

நான் அங்கிருந்து வருபவளல்ல என்பேன்

பலகாலங்களுக்கு முன்னர் என் அயல்வாசிகள்

மந்திரித்த முட்டை ஒன்றை

வேலியைத் தாண்டி எங்கள் நிலத்தில் புதைத்த  

புல்வெளிப் பிரதேசத்தைச் சார்ந்தவள் நான்,

ஆனால் அந்தக் கணக்கை சரிசெய்தவர்களை அல்ல.

,

பள்ளியில் ஆரம்ப ஆண்டுகளில் நான் கனவுகள் கண்டேன்

அவர்கள் என்னை வெட்டிக்கொல்ல துரத்தி வருவதாக

உயர் வகுப்புகளில் என் கனவுகள் கணிதத்தில் நான்கு பெறுவதாக இருந்தது.

(1 தேர்ச்சி தவறுதல் 5 சிறப்பு)

பல்கலைக்கழக்கத்தில் நான் எந்தக் கிளர்ச்சியிலும் ஏற்படவில்லை

,

இரவுகளில் வடக்கே பனிமலைகள் உருக்குவதைக் கேட்பேன்

அமெரிக்கா நிலச்சரிவுகளில் புதைக்கப்படுவதை

அப்படித்தான் வேணும்!

என் கிராமத்து மக்கள் சொன்னார்கள்

,

என்னுடைய முலைகள் இன்னமும்

அந்தக் காலத்து

பெட்ரோவிக் பெண்ணின் கணிதத் தேர்ச்சி நிலையைப் போன்று, 

சூம்பின இரண்டு!

கணித விடைத்தாள்களை திருத்தித் தரும்போது என் ஆசிரியை சொல்வதைப் போன்று   

,

இப்பவும் அவர்கள் உன்னைப்பற்றி என்னிடம் விசாரிக்கிறார்கள், வலிக்கிறது,

பள்ளியில் என்னால் உச்சரிக்க முடியாத எழுத்து எது 

எனக் கேட்டதை விடப் பல மடங்கு வலி மிகுந்தது அது

போங்கடா தாயோழிகளா

போயி உங்களால சொல்ல முடியாதது எதுன்னு பாருங்க

நான் எண்ணிக்கொண்டேன்.                  

 ,

நீ செல்வந்தனாக இருக்க வேண்டும்

அப்படித்தான் நீ நடந்துக் கொண்டாய்

ஆனால் நான் உன்னிடம் சொல்லவில்லை

நான் எப்பொழுதும் கனவு கண்டேன் 

நீ என்னை நோக்கி வருவதை

பூர்ஷ்வாக்கள் கூட வெறுங்கையோடு செல்லும் அந்த இடத்துக்கு

,

நீ என் அணைப்புக்குள் வரமாட்டாயா

என எந்நேரமும் ஏங்கிக் கொண்டிருந்தேன் நான்.

00

அரவிந்த் வடசேரி

1964 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் வாழ்ந்து வருகிறார். நெடுங்கால வாசகர் எனினும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகத் தான் எழுதுகிறார். சொந்தமாக சிறுகதைகள் எழுதுவதோடு மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவரது படைப்புகள் ஆவநாழி, இருவாட்சி, தாய்வீடு மற்றும் கலகம் இதழ்களில் வெளியாகியுள்ளது. ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ஆவநாழி மென்னிதழின் துணை ஆசிரியராகவும் செயல்படுகிறார்.             

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *