சூர்யமித்திரன் கவிதை

நான்காவது

தடவையான

முயற்சி

–

புரோக்கர் மாமாவின்

சொதப்பல் பாகம் நான்கு

–

இளவயது கழித்தல்

சிறுநீர் போல அல்ல

சாமி படம் போட்டு

இங்கு சிறுநீர் கழிக்காதீர்‌

–

இப்போதெல்லாம்

அதுவும் போகமுடியாது

–

சக்கரை இனிக்கிற சக்கரை

அக்கரை அங்கன எங்கே

‌அக்கரைன்னு சொல்றாப்பல

–

நீர் தெளித்து கோலம் போட்டு

இந்து சாமிகளுக்கு

கதம்பம் கொத்து செருகிடறாப்பல‌

–

மொத கிராக்கி

பிரேக் இல்லாத வண்டிக்கு

–

அடுத்தது

கறுப்பு காமாக்னிங்க

–

மூணாவது

திருநங்கை சாலினி ங்க

–

நாலாவது

உடலெங்கும் முகமெங்கும்

மருக்கள் பூத்த

பெண் பிருந்தாவன் ங்க

–

என்

இளமையெனும்

பூங்காற்று

சூறாவளிக்கு‌

பிறந்ததோ

–

புரோக்கரைத் துரத்துகிறேன்

என் ஏமாற்ற கற்பு கழியாத

பருவத்தோற்றலின்

கன்னி கதை எண்ணி.

++

சூர்யமித்திரன்

இ.செல்வராஜ் இயற்பெயர். 1983 முதல் எழுதி வருகிறார். படைப்புகுழுமத்தின் கல்வெட்டு,கொலுசு,காற்று வெளி,தளம்,கணையாழி, நடுகல்.

சொல்வனம்/ஆனந்தவிகடன், காமதேனு நிழற் சாலை..

இப்படியாக நிறைய இணைய இதழ்களில் கவிதை வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *