முனைவர் கா. குமார்

,

நறுக்கென குத்திய முள்ளாய்..

விடுக்கென உதறிய

காலைப் போல்..

திடுக்கென எழுமுன்னே

,

சிந்தை மறைப்பதென்ன நியாயம்..

யாம் செய்த தவறென்ன

,

என அறியா குழந்தையும்..

தையத் தக்கன குதித்த

கால்களும் ஒடிக்கப்பட்டு..

ஓரமாய் அடுக்கப்பட்ட

தென்ன பாவம்..

பட்டதெல்லாம் போதும்

போ அங்கிட்டு என

வெள்ளமாய் குளியாட்டி

விட்டதென்ன கொடுமை..

,

மை இட்ட இமை மூடிட்டு..

நட்ட மரமெல்லாம் நடுங்கி

வீழ்ந்தது ஏனோ நடுக்கத்தால்..

வீணாய் போன விபரீதத்தை

விவரித்தால் வெள்ளமென

கண்ணீர் குபீரென்று வரும்..

வந்து மட்டுமென்ன ஆகப்போகுது..

ஆகப்பெரும் வெள்ளத்தில்

மூழ்கி கிடக்கையில்..

எம் கண்ணீரும் அதில் கரைந்து

இன்னும் மிகை வெள்ளமாகுதோ..

,

இயற்கையை மிஞ்சத் துடிக்கும் மனிதன்..

ஆனாலும்,

மனிதனை மிஞ்சும் இயற்கை

இருக்கையில் யாரென்ன செய்ய..

,

மொழி கடந்து..

இனம் கடந்து ..

நாடுகடந்து வருத்தம்..

காலம் கடந்து வரும்

தலைமுறையேனும்

இந்த குளியல் சாவில்

தப்பிக்க வழி கேட்போம்

வலி கொடுக்கும்

அந்த இயற்கையை..

இரு கையை நீட்டி..

00

முனைவர் கா. குமார், உதவிப் பேராசிரியர், விலங்கியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை, அ. வீ.வா. நினைவு திருபுட்பம் கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர். இக்கல்லூரியில் 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். பள்ளிப்படிப்பை தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளி, இளங்கலை அறிவியல் பட்டபடிப்பினை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி, முதுகலை அறிவியல், மற்றும் ஆய்வியல்  நிறைஞர் பட்டபடிப்பினை அ.வீ.வா. நினைவு திரு புட்பம் கல்லூரியிலும் முடித்துள்ளேன்,  முனைவர் பட்ட ஆய்வினை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பதிவுசெய்து ஆய்வினை சமர்பித்துள்ளேன். மலாயா பல்கலைக்கழகம் (மலேசியா) மற்றும் குளித்தலை  அரசு கலைக் கல்லூரி இணைந்து நடத்திய தமிழர் வாழ்வியல் மரபுகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் “பாரம்பரிய அரிசியின் மருத்துவ பண்புகள்” என்ற தலைப்பில் ஆய்வுகட்டுரையை சமர்பித்துள்ளேன். தஞ்சாவூர் வனத்துறை சார்பாக நடத்தப்பட்ட வனவிலங்குகள் பற்றிய கட்டுரை போட்டியில் “சிறந்த எழுத்தாளர்“ விருதை பெற்றுள்ளேன். தமிழ் – தமிழர் நலம் சார்ந்து தமிழ்  நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் மற்றும் அதன் மருத்துவம் சார்ந்த தகவலை சேகரித்து கிரீயட் அமைப்பிற்கு “நெல்லும் – வாழ்வும்“ என்ற நூலை எழுதி வழங்கியுள்ளேன். விழித்திடுவோம் தோழா என்ற கவிதை நூலினை (16.8.2026) எழுதி வெளியிட்டுள்ளேன். இயற்கை ஆர்வலர், சமூகம் சார்ந்து செயல்பாடுகள், சுற்றுச்சூழல் குறித்து பல விவாதங்களில் பங்கேற்றுள்ளேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *