பச்சை உடம்புக்காரியின்

வயிற்றுத் தழும்புகளாய்

வானத்தில் கோடுகள்

0

இடது காதருகே மலையாள நடிகர் தமிழில் வாதாடிக் கொண்டிருந்தார்

வலதுபுறம் குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது

தூறலாக ஆரம்பித்தது

இதுவரை துரத்திக் கொண்டே வருகிறது

காய்கறி விற்பவர் சுமையை இறக்கி வைத்து தலை துவட்டிக் கொண்டார்

கையையும் பையையும் குடையாக்கி

எல்லோரும் ஒளிந்து கொள்ள

இடம் தேடி

ஓடிக்கொண்டே இருந்தனர்

ஜன்னலோரம் பச்சைத் துண்டணிந்த பெரியவர் மட்டும் கையெடுத்துக் கும்பிட்டார்

விதைக்கோ உழவுக்கோ

காத்திருந்த சம்சாரியாகத்தான் இருக்கும்

00

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *