1 நிறப்பிரிகை

,

மலை அடிவாரம்

உச்சிப்பிள்ளையார் கோவில் எங்கே

இதோ இங்கே தான்

இங்கே தானா

சிரித்து

கன்னம் தடவும் வழிப்போக்கன்

தொட்டுப் பேசாதேடா

நான் ஆண்

,

2. அரசி

,

அருகலின்

வசந்த காலத்தில்

அவளே

பூகோளத்தில் பிறந்த

தேவதையெனவும்

தன்னை ஆளும்

அரசியெனவும்

திருவாயது புலம்பி

பாசுரம் பாடுவதில்

ஆனந்தம் அவனுக்கு

,

பூட்டப்பட்ட சாளரங்களின்

வீச இடைவெளியில்

உட்புகும் ஒளியென

அவளின்

கடைசி உரையால்

பிளவுப்பட்ட இதயம்

இன்று முதலோ

ஏமாற்றத்தின்

சின்னமாகவே

பாவுவதிலிருந்து தொடங்குகிறது

புலம்பி அழும்

காதல் முறிவின்

சோகக் கீர்த்தனைகள்.

,

3. தீச்சுடினும்

,

வறுமயை மேற்கோள் காட்டு

ஏதேனும் வழியில்

கழிவிரக்கம் செய்

இரவிடம் சோகங்களை ஓது

அழுது ஒழிந்து

நிம்மதியாய் உறங்கு

பணம் இலாதுபோது சிரி

பசி கொய்தால்

அரவமாய் நெளி

பிச்சைக் கேட்காதே

தாக்குப்பிடி

முடியவில்லையெனில்

செத்துப் போ

நபர்கள் வருவர்

கல்லும் தேயும்

,

எதுவானாலும்

மாவீரனே இரசி

உணர் உன்னை

சுற்றித் திரி

அனுபவம் எதற்கு

இவற்றைக் கூற

கிழித்தெறி என்பேன்.

,

4. ஜிப்சி

,

காற்றுதனில்

கட்டுப்பாடற்று அலையும்

நானோ துகள்

விழிகளுக்கு புலப்படாது

இன்பத்தில் லயித்திருக்கிறது,

மதுரமற்ற பொழுதுகளில்

தேடலில்

நோக்கம் இராத

நாடோடியென

சிறுகணம்

ஆற்றுப்படுத்திக் கொள்ளவும் செய்யகிறது

,

வீம்பாய்

வாழ்க்கை வட்டத்தை

விடுத்து

ஒற்றைப்படையில்

வாழ்பவர்கள்

தனிமையின்

ஏகாந்தத்தை

பற்றத்தானே செய்கிறார்கள்.

00

இயற்பெயர் கார்த்திக். திருச்சியைச் சேர்ந்தவர்.முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *