–ஆதன் ஆரா
,
கல்லாமை யாவும்
இல்லாமை ஆகும்
அறிவுடைமை யாவும்
அறியாமை போக்கும்
,
திறமை யாவும்
வெற்றிப்படி ஏறும்
வெறுமை யாவும்
விண்ணைத்.தாண்டி ஓடும்
,
பொறுமை யாவும்
பெருமை பெறும்
ஏழ்மை யாவும்
ஏற்றம் காணும்
,
எளிமை யாவும்
அழகாய்ப் போற்றப்படும்
அடக்கமுடைமை யாவும்
அன்பாய் நேசிக்கப்படும்
,
நிலைமை யாவும்
சரியாய் மாறும்
நிலையாமை யாவும்
யாவரும் அறிந்தது ஆகும்
,
அருளுடைமை யாவும்
மதவெறியை எதிர்க்கும்
அறனுடைமை யாவும்
அதிகாரத்தில் ஏறும்
,
தற்பெருமை யாவும்
நாவடக்கம் தேடும்
தனியுடைமை யாவும்
பொதுவுடமை ஆகும்
,
இவ்வுலகம் யாவும்
எந்தப் பொழுதில்
இவை யாவும்
சாத்தியம் ஆகும்
அந்தப் பொழுது
வரும் வரை
பிறக்கும் காலம் யாவும்
வீணாய்ப் போகும்
பிறக்கும் நேரம் யாவும்
தானாய்ச் சாகும்
00

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

