தம்பி…

வாங்க ஒரு தம்ப்போட்டு வரலாம் என்றார்

இல்லைங்கண்ணா பழக்கமில்லை என்றேன்.

இந்த புத்தகம் படிங்கண்ணா என்றேன்

இல்லை தம்பி பழக்கமில்லை என்றார்.

மீண்டும் தம்பி என்று ஆரம்பித்து பழக்கமில்லைன்னுதான சொன்னீங்க வேண்டாம்னு சொல்லுலியே என்றார்.

அதையே நானும் சொன்னேன்.

,

பக்கங்களின் சத்தமும்

புகையுமாக நிறைந்தது

நாங்கள் இருந்த அந்த இடம்.

00

ரசீதுச் சீட்டுக்கொடுத்து உண்மையான எழுத்துக்களை உருவாக்கிக் கருணையைப்

பிரச்சாரம் செய்துக் காசு சம்பாரிப்பவன்.

,

முகம் மழித்து, சேலையுடுத்தி

உள்ளே ரெண்டுக் கொட்டாம்புச்சி வைத்து கடவுளாக மாறி

காசு சம்பாரிப்பவன்

,

நேற்று இடது காலிலும்

இன்று வலது காலிலும் அடுத்தடுத்த நாட்களில் கை, தலையெனக் கட்டுப்போட்டுக் காசு சாம்பாரிப்பவன்

,

குழந்தைகளிடம் பொருட்களைக் கொடுத்து இரக்கத்தை முதலீடுச்செய்து

இரக்கமற்றுக் காசை சம்பாரிப்பவன்

,

கழிவறைக்குள் பெண்ணை அம்மணமாக சித்திரம் வரைந்து

நிர்வணமற்ற காசு சம்பாரிப்பவன்

,

இரவு ரோட்டு ஓரத்தில்

நடிகைகளின் உடையணிந்து

முலையில் பாதியும்

தொடையில் மீதியுமாக

நின்று காசு சம்பாரிப்பவன்

,

இதெல்லாம் நான் சொல்லும்போதே

நீங்கள் என்னை அடையாளப்படுத்திவிடலாம்

யாரையும் எக்கணத்திலும் ஏமாற்றாத

மனிதனாக வாழ்கிற எளியவன் நானென்று.

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *